search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை கலெக்டர் அலுவலகம்"

    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை தொடங்கி நகர சாலைகள் வரை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிக்கும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி இந்த அதிரடி சோதனையை நடத்துகிறார்கள்.

    இந்தநிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அந்த காரை எடுக்காத நிலையில் வாகனத்திற்கான பதிவு எண் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பதால் சந்தேகம் வலுத்தது.

    அதன் அடிப்படையில் முதற்கட்டமாக காவல்துறையினர் 4 நாட்களாக நின்று கொண்டிருந்த காரை தீவிர விசாரணை செய்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் 4 நாட்களாக மர்ம கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய 3 பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
    • 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கான 45 ஆயிரம் ஏக்கர், மேலூர் ஒருபோக பாசனத்திற்கான 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கான 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர்திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய ௩ பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்திட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 36 கண்மாய்கள், 110 கிராமங்கள் மற்றும் 5 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. விவசாயம், குடிநீர், கால்நடை தேவைக்கும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    தற்போது போராட்டம் நடத்தி வருகிற பாசன விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் மதுரை மாவட்ட கலெக்டர் திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
    • அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் (15-ந்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த நிலையில் அவனியாபுரம் முனியசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

    அதில் அவனியாபுரத்தில் கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. நடப்பாண்டு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் வைத்து நடத்தும் சூழல் உள்ளது. பட்டியல் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

    கோர்ட்டின் முந்தைய உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசார ணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசு அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு நடத்துகிறது. அந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைக்க வேண்டியது அவசியமாகும். கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் அனைத்து சமூக பிரதிநிதிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும்.

    இதில் தீர்வு ஏற்படாவிட்டால் ஒருங்கிணைப்பு குழுவில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை சேர்த்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

    அவர்களில் 16 பேரை தேர்வு செய்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தென்கால் பாசன விவசாய சங்கத்தினருக்கும், அவனியாபுரம் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தல் சலசலப்பு ஏற்பட்டது.

    • மகளை ஒரு மர்ம கும்பல் சட்டவிரோதமாக தனி அறையில் அடைத்து வைத்து உள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் விவகாரத்தில் தலையிட்டு, என் மகளை மீட்டு தர வேண்டும் என்று விவசாயி தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 39). விவசாயியான இவர் இன்று காலை மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து போர்டிகோ வாசலுக்கு வந்த முனிராஜ் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு முனிராஜை தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவரை அங்கிந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தல்லாக்குளம் போலீசார் முனிராஜிடம் விசாரித்தனர். அப்போது அவர், "என் மகளை ஒரு மர்ம கும்பல் சட்டவிரோதமாக தனி அறையில் அடைத்து வைத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, என் மகளை மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து முனிராஜை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு எலி, பாம்புகளுடன் நூதன ஆர்ப்பாட்டம்

    மதுரை:

    டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்துக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஜெய்பீம் படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் பாம்புகள், எலிகள் மற்றும் தோல்பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவைகளுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று பேரணியாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி கூறுகைகில், ஜெய்பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா காட்டியுள்ளார். சூர்யாவுக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் என்றார்.

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் தர்ணா போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்-லைன் வகுப்புகள் நடந்து வந்தன. இதனால் தேர்வுகளும் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் எழுதி வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் தமிழகம் முழுவதிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ-மாணவிகள் நேரடியாக பங்கேற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு நேரடியாக வந்து தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இன்று தேர்வு தொடங்கும் நிலையில் தனியார் கல்லூரியின் இந்த அறிவிப்புக்கு மாணவ-மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அந்த கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் ஆன்-லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் தர்ணா போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மனுநீதி நாள் என்பதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இன்று நடப்பதாக வெளியிடப்பட்ட செமஸ்டர் தேர்வு அட்டவணைகள் 2 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகிழம்பட்டியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 20) கல்லூரி மாணவி.

    இவருக்கு பேஸ்புக் மூலம் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த அஜீத்குமார் என்ற வாலிபர் அறிமுகமானார். இருவரும் கருத்துக்களை பரிமாற்றம் செய்து காதலில் விழுந்தனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    நாளடைவில் அஜீத் பிரகாஷ், மாணவி மகாலட்சுமியுடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார். மேலும் மகாலட்சுமியிடம் இருந்து வரதட்சணையாக கொடுத்த நகை, பணத்தை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டார்.

    மனவேதனையில் இருந்த மகாலட்சுமி இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தனக்கு நியாயம் வழங்கக் கோரி அங்குள்ள வளாகத்தில் அவர் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் போலீசார் மகாலட்சுமியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    ஏற்கனவே பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று பொள்ளாச்சியை சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
    கலெக்டர் அலுவலகத்தில் மகன்-மகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுக்க காத்திருந்தனர்.

    இன்று காலை 10 மணி அளவில் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது மகள், மகனுடன் அங்கு வந்தார். சிறிது நேரம் மனு கொடுப்பதற்காக நின்றிருந்த அந்த பெண் திடீரென தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றினார். பின்னர் தீக்குச்சியை எடுத்து பற்றவைக்க முயன்றார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து அந்த பெண்ணையும், சிறுமி, சிறுவனையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (வயது32) என தெரியவந்தது. இவரது கணவர் அருள்முருகன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு முத்துதர்ஷினி (10), கருப்பசாமி (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.

    கணவர் இறந்தவுடன் பஞ்சவர்ணம் தனது தந்தை இருளப்பன் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவசாய கூலி வேலை பார்த்து குழந்தைகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சகோதரர்கள் துன்புறுத்தி தன்னை வீட்டில் இருந்து விரட்டி விட்டனர்.

    இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பஞ்சவர்ணம் முயன்றுள்ளார்.

    மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    மதுரை:

    மதுரை மாவட்ட தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முறையான காலமுறை ஊதியம், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட துணைத் தலைவர் செல்வகுருசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசினார், மாவட்டச் செயலாளர் நீதிராஜா, மாவட்டப் பொருளாளர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் பாலாஜி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோலையன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பெண் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு நாள் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் வந்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர்.

    இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டவாறு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர்.

    தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தீக்குளிக்க முயன்றது மதுரை மாவட்டம் மேலூர் நேதாஜி ரோட்டை சேர்ந்த சலீம் மனைவி ‌ஷகிராபானு (வயது 43) என்பது தெரிய வந்தது. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரிடம் கடன் வாங்கியுள்ளார். பல்வேறு தவனைகளில் கடன் பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்பும் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து மேலூர் போலீசார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொலைமிரட்டல் விடுப்பதாக கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ‌ஷகிரா பானு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
    நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலு வலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் அலுவலக வளாகத்துக்குள் திடீர் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தெற்குத் தெரு கிராமத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒரு பிரிவினர் வேலி அமைத்துள்ளனர். இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அட்டைகளை ஏந்தி கோ‌ஷமிட்டனர்.

    சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தெற்குத்தெரு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஆக்கிரமித்து இரும்பு வேலி போட்டுள்ளனர்.

    இதனால் எங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற மாவட்ட கலெக்டர் ஏற்கனவே உத்தரவிட்டும் அவர்கள் அக்கிரமிப்பை அகற்ற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இனிமேலாவது கடும் நடவடிக்கை எடுத்து நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றனர்.

    ×